Perambalur district youth, skill development training in textile industry: Collector Karpagam call!

இந்திய பொருளாதாரத்தில் ஜவுளி தொழில் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக கிராமப்புற மக்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பு வழங்குவதில் ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானதாகும்.

தமிழகத்தின் துணிநூல் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக, தமிழக அரசு, துணிநூல் துறை மூலம் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு (இருபாலர்கள்) தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம் (SITRA) மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேற்படி பயிற்சியினை பெற விரும்புபவர்கள் https://tntextiles.tn.gov.in./jobs/ என்ற வலைதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குநர், மண்டல துணை இயக்குநர் அலுவலகம், துணிநூல் துறை, 30/3, நவலடியான் வளாகம் முதல் தளம், தான்தோன்றிமலை, கரூர்-639005 என்ற முகவரியில் நேரிலோ அல்லது rddtextileskarur@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ மற்றும் 04324- 299 544, +91- 98945 60869, +91-94446 56445 ஆகிய தொடர்பு எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என பெரம்பலூர் கலெக்டர் க.கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!