தே.மு.தி.க கொடி நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் துங்கபுரம், அண்ணாநகர், பரவாய், ஆகிய கிராமங்களில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் தலைமையில் கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி முதியோருக்கு வேட்டி,சேலையும், பள்ளி மாணவர்களுக்கு, நோட்டு, பேனா, சிலேட்டு போன்ற உபகரணங்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மலர்மன்னன் மாவட்ட துணை செயலாளர்கள் சிவக்குமார், கண்ணுசாமி, தர்மலிங்கம் ஒன்றிய செயலாளர் சி.மலர்மன்னன், மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி சுரேஷ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், கோவிந்தன், சங்கர், காமராஜ், மதியழகன், ராசவேலு, குமார், செம்மலை உள்பட கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்காண ஏற்பாடுகளை கிளை கழக நிர்வாகிகள் செல்வம், செந்தில், அழகர், அன்பு, பெரியசாமி,ஆகியோர் செய்திருந்தனர்.