Perambalur DMDK former district secretary and municipal DMK councilor Durai Kamaraj passed away! A. Raja paid tribute
பெரம்பலூர் நகராட்சி 17வது வார்டு கவுன்சிலரும், முன்னாள் தேமுதிக மாவட்ட செயலாளருமான துரை.காமராஜ் ((52) இன்று காலை மாரடைப்பால் இயற்கை எய்தினார். பெரம்பலூர் அரணாரையை சேர்ந்த அவர் தேமுதிகவின் தீவிர ஆதரவாளனாக இருந்த துரை. காமராஜ் இரு முறை குன்னம் தொகுதியில் சட்ட மன்ற வேட்பாளராக போட்டியிட்டார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் பாதிக்கப்பட்ட பின்னர், தேமுதிகவில் இருந்து விலகி ஆ.ராசா முன்னிலையில் கடந்த சில ஆண்டுகளாக திமுகவில் இணைந்து கட்சிப் பணிகளை செய்து வந்தார். பெரம்பலூர் நகராட்சி கவுன்சிலராகவும் வெற்றி பெற்றார். கடந்த சில மாதங்களாக நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தவர் இன்று காலை உயிரிழந்தார்.
அவருக்கு திமுக பிரதிநிதிகள், தொண்டர்கள், தேமுதிக கட்சியினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா. எம்.பி., பெரம்பலூர் நகராட்சி கவுன்சிலர் துரை.காமராஜ் உடல் நலக் குறைவால் மறைந்ததையொட்டி, அரணாரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதில் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.இராஜேந்திரன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார்,
பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு.நீலமேகம், மாவட்ட துணைச் செயலாளர் சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ம.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி,தி.மதியழகன், சி.ராஜேந்திரன், டாக்டர் செ.வல்லபன், பெரம்பலூர் நகர் மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் அரனாரை ஜெயக்குமார், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.