பெரம்பலூரில், மக்கள் நல கூட்டணியில் தேமுதிக இணைந்ததால் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இன்று மக்கள் நல கூட்டணி தலைவர்கள் சென்னை கோயேம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தை சந்த்தித்து பேசினர்.
அப்பொழுது தேமுதிகவும் மக்கள் நல கூட்டணியும் இணைந்து தேர்தலில் போட்டியிடும் என தெரிவித்தனர்.
இது குறித்து அறிந்த பெரம்பலூர் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மகிழ்ச்சியை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் வெளிப்படுத்தினர்.
மேலும் இந்த கூட்டணி வெற்றி கூட்டணி எனவும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வர் ஆவார் எனவும் தொண்டர்கள் தெரிவித்தனர்.
அப்போது மக்கள் நலக் கூட்டணியினர் உடன் இருந்தனர்.