பெரம்பலூர் தேமுதிக ஒன்றிய செயலாளராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாசு.ரவி பதவி வகித்து வந்தார்.
சமீப காலத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இன்று தேமுதிகவில் இருந்து திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.இராசா முன்னிலையில் பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள அவரது அலுவலகத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் வாசு.ரவி திமுக கட்சியில் இணைந்தார்.
அப்போது ஆ.இராசா வரவேற்று பேசியதாவது: திமுக ஒரு பாலி கிளினிக், இங்கு பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்ற நிபுணத்துவம் கொண்ட மருத்துவக் குழுவை கொண்டது. வாசு.ரவி சிறு சிறு டாக்டர்களை பார்த்து விட்டு தற்போது சரியான நேரத்திற்கு திமுகவிற்கு வந்துள்ளார்.
திமுக ஒரு சுயமரியாதை இயக்கம், இங்கு வருபவர்களின் சுயமரியாதை காக்கப்படும், சரியான வழிகாட்டல் செய்யப்படும் என்றும், அரசியல் வாழ்க்கை என்பது மழை பெய்ய வேண்டும், அதில் குடை பிடிக்க வேண்டும் என்பது போல இருக்க வேண்டும்.
எனவே, உங்கள் வீணாகாமல் நம்பி வந்தவர்களை திமுக காக்கும், கலைஞர் வழியில் , தளபதி ஸ்டாலின் வழியில் திமுகவை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல பயணிப்போம் என வரவேற்று பேசினார். பின்னர், மாற்று கட்சியில் இருந்து வந்த அனைவரையும் வரவேற்று திமுக கட்சி வேட்டி சேலைகள் அணித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், மகளிரணி மகாதேவி ஜெயபால், வேப்பந்தட்டை முன்னாள் ஒன்றிய செயலாளர் தங்கராசு, வேப்பந்தட்டை ஒன்றிய நல்லத்தம்பி, பெரியம்மாபாளையம் ரமேஷ், உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.