பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பூர் ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேப்பூரில் நடந்தது.
கூட்டத்திற்கு வேப்பூர் ஒன்றிய செயலாளர் சி.மலர்மன்னன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் துரை.காமராஜ் கலந்து கொண்டு,
வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்தும், 2016ல் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் முதல்வராக குன்னம் சட்டமன்றதின் சார்பாக சட்டமன்ற உறுப்பினரை தேர்தெடுத்து அனுப்புவது குறித்தும், கழக செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
மேலும் மாவட்ட கழக செயலாளர் பேசியதாவது.
ஒவ்வொரு கிளைகள் தோறும் வீட்டின் உரிமையாளர் அனுமதிபெற்று சுவர் விளம்பரம் செய்வது, கிராமங்கள் தோறும் அந்தந்த பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் ஒன்று கூடி தெருமுனை பிரசாரம் மேற்கொள்வது,
கிளை நிர்வாகிகள் வாக்காளர் பட்டியல்களை சரிபார்த்து திருத்தம் செய்து, கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இருப்பதை உறுதி செய்தல். வாக்காளர்களிடம் நமது நிர்வாகிகள் முரசு சின்னத்தையும், தேமுதிக வேட்பாளர் படத்தையும் தெளிவாக மக்களிடம் எடுத்துரைத்தல்.
வாக்காளர் தினத்தன்று வாக்களிப்பதை உறுதி செய்தல், தேமுதிகவின் தேர்தல் அறிக்கையினை விவரித்தும், அதன் பயனை பொதுமக்களிடம் எடுதுக்கூறியும் வாக்குகள் சேகரிக்கவேண்டும் .
கட்சி தலைவர் கூறும் ஆலோசனைகளின்படி செயல்படவேண்டும்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் சீனி.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார், கண்ணுசாமி, சுடர்செல்வன், தர்மலிங்கம் செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜ், பொதுகுழு உறுப்பினர் ரவிக்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வைரமணி,
பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் வாசுரவி, குரும்பலூர் பேரூர் செயலாளர் ரமேஷ், கேப்டன் மன்ற செயலாளர் தவசிஅன்பழகன், தொழிற்சங்க நிர்வாகிகள் சேகர் , ஜோதிலெட்சுமி, சரவணன், சுரேஷ், வேல்முருகன், முன்னதாக லப்பைகுடிக்காடு பேரூர் கழக செயலாளராக கமால்பாஷா வரவேற்றார்.
ஒன்றிய நிர்வாகிககள் வரதராஜ், செந்தில்குமார், அண்ணாதுரை, முத்துசாமி, கோவிந்தராஜ், மதியழகன், கோவிந்தன், செந்தில், வெங்கடேஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை கழக மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முடிவில் வேப்பூர் கிளை செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.