Perambalur: DMK candidate Arun Nehru supporting DMK general secretary Vaiko vote collection!
பெரம்பலூர் எம்.பி தொகுதி தி.மு.க.வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து, ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வை.கோ. கனரா பேங் அருகில் திறந்த வேனில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது:
9 இலட்சத்து 75ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள் மூலம் 30இலட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, 2 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச பம்ப் செட் மின்சாரம் வழங்கியது,மாதம் ரூ.1000. மகளிர் உரிமைத் தொகை, மகளிர்க்கு இலவச பேருந்து பயணம், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசுப் பள்ளியில் படித்து கல்லூரி சேரும் மாணவ,மாணவிகளுக்கு மாதம் ரூ.1000.வழங்கும் திட்டம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இந்த தேர்தலில் ஜனநாயகமா, சர்வாதிகாரமா எனும் கேள்விக்குறி எழுந்துள்ளது. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.அருண்நேருவிற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பேசினார்.
மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், தலைமை கழக பேச்சாளர் வரகூர் காமராஜ்,
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் சுரேஷ், ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் ஜெயசீலன், விசிக மாவட்ட செயலாளர் ரத்தினவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன், தி.க தலைவர் சி.தங்கராசு, தொழிலாளர் கட்சி மாவட்ட செயலாளர் நெடுஞ்செழியன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் சர்புதீன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் குதரத்துல்லா, எம்.ஜி.ஆர்.கழகம் மாவட்ட செயலாளர் சக்திவேல், இந்திய தொழிலாளர் கட்சி நிறுவனத் தலைவர் பி.ஆர்.ஈஸ்வரன், மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முஜிபுர்ரஹ்மான், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ரவி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட பொறுப்பாளர் இளையப்பன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் வெற்றிமாறன்,கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் மாவட்ட செயலாளர் பா.ரினோபாஷ்டின், சிவசேனா கட்சி மாவட்ட பொறுப்பாளர் பா.பரஞ்சோதி, கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ஏ.கே. ராஜேந்திரன், ஆட்டோ சங்க தலைவர் சண்முகம் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பேர் கலந்து கொண்டனர்