Perambalur: DMK MP candidate Arun Nehru campaigned with allies in the municipality and collected votes!
பெரம்பலூர் எம்.பி தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு நேற்று பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை, நான்குரோடு, எளம்பலூர் சாலை போன்ற பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.
அப்போது வேட்பாளர் அருண்நேரு பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சியில் மகளிருக்கான உரிமை தொகை திட்டம், பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவ,மாணவிகளுக்கு கல்வி ஊக்க தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி மருத்வதும் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுபோட்டு வெற்றிபெற வைத்தால் பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆறுகள், ஏரிகள், குளங்கள், வரத்து வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகள் அமைத்து 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழக அரசு கொண்டு வரக்கூடிய எந்த ஒரு திட்டத்திற்கும் மத்திய அரசு ஆதரவு தருவது கிடையாது. அதற்கு எதிரான நிலையை தொடர்ந்து கையாண்டு வருகிறது. அவர்களுக்கு சாதகமான மாநிலங்களுக்கு மட்டுமே நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் பொழுது திமுக அளித்துள்ள அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். எனவே எனக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுபோட்டு வெற்றி பெற வைக்கவேண்டும் என தெரிவித்தார்.
பிரச்சாரத்தின்போது மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ரோவர் வரதராஜன், கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, மாவட்ட செயலாளர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன், மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன், காங், மாவட்ட தலைவர் சுரேஷ், முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜ்குமார், துரைசாமி, இளைஞரணி மாவட்ட செயலாளர் ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர் சிவசங்கர் விசிக மாவட்ட செயலாளர் வக்கீல் ரத்தினகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.