Perambalur: DMK seized 4 panchayat unions. The Vice-Chancellor’s post was resided by the AIADMK and VCK
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு, வடக்கு மாதவியை சேர்ந்த திமுக உறுப்பினர் மீனாஅண்ணாத்துரையை எதிர்த்து யாரும் போட்டி வேட்பு தாக்கல் செய்யாததால், அவர் ஒன்றியக் குழுத் தலைவராக அறிவிக்கப்பட்டார். பின்னர் மாலை நடந்த துணைத் தலைவர் தேர்தலில் கோனேரிப்பாளையத்தை சேர்ந்த திமுக உறுப்பினர் சாந்தாதேவி குமார் தேர்வு செய்யப்பட்டார்.
இது போன்று, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் திமுக உறுப்பினர் நூத்தப்பூர் ராமலிங்கமும், துணைத் தலைவராக திமுக உறுப்பினர் வெங்கனூர் ரெங்கராஜும் தேர்வு செய்யப்பட்டனர்.
வேப்பூர் ஒன்றியத்தில் அசூரை சேர்ந்த திமுக உறுப்பினர் பிரபாசெல்லப்பிள்ளையும், துணைத் தலைவராக விசிகவை சேர்ந்த செல்வராணி வரதராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆலத்தூர் ஒன்றியத்தில், திமுக கூட்டணி உறுப்பினர் 9 பேரும், அதிமுக உறுப்பினர் 9 பேரும் என இருந்ததால் மறைமுக வாக்கெடுப்பு நடந்தது. அதில், 9க்கு 9 என சரிசமமான வாக்குகள் பதிவானதால் ஒன்றியக்குழுத் தலைவர் பதவிக்கு சீட்டு குலுக்கல் நடத்தப்பட்டது. அதில், கொளக்காநத்தம் கிராமத்தை சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளரான ஆலத்தூர் என். கிருஷ்ணமூர்த்தி, தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்த வரகுபாடி சுசீலா என்பவரும் இதே போன்று குலுக்கல் முறையில் தேர்வானார்.
வெற்றி பெற்றவர்கள், தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.