Perambalur DMK student team pays tribute to Anita who committed suicide due to failure in NEET!
பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணி சார்பில், நீட் தேரவால் தற்கொலை செய்து கொண்ட அணிதா-வின் 6- ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பெரியார் சிலை அருகே அனிதாவின் உருவப்படத்திற்கு, திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர், பின்னர் மெழுவர்த்தி ஏந்தி மவுனஞ்சலி செலுத்தினர். இதில், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் இர.ப. பரமேஷ்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா, நகர் மன்ற உறுப்பினர்கள் ரஹமத்துல்லா, நல்லுசாமி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் பா.ரினோபாஸ்டின், கிருஷ்ணா, இள.ராகவி ரவிக்குமார்,தமிழ்வேந்தன், அ.இளையராஜா, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் கோபி கிருஷ்ணா, உதயநிதி ரசிகர் மன்ற நகர செயலாளர் வல்லா வேல்முருகன், மற்றும் அன்னை பாரா மெடிக்கல் மற்றும் தீபம் சமுதாய கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.