பெரம்பலூரில் அதிமுக சரித்திர சாதனைகளை விளக்கி மகளிர் அணி எழுச்சிப் பிரச்சார பேரணி நடைபெற்றது.
அதிமுக சரித்திர சாதனைகளை விளக்கி மகளிர் அணி எழுச்சிப் பிரச்சார பேரணி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சங்குப் பேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது, இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்,
பேரணியை புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் பூனாட்சி துவக்கி வைத்தார்,
அப்போதது அவர் பேசியதாவது: திமுகவினருக்கு இது கடைசி சட்ட மன்ற தேர்தல், திமுகவினர் எங்கெல்லாம் போட்டியிடுகின்றனரோ அங்கெல்லாம் டெப்பாசிட் இழக்க செய்ய வேண்டும் என பேசினார்.
இதில் சட்ட உறுப்பினர் தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கர்ணன், பாடாலூர் ஊராட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட கட்சி பிரதிநிகள் மற்றும் மகளிர் அணியினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.