பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமததில் நடைபெற்ற இளைஞர் அணிக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம் எம்.எல்.ஏ.,சிவசங்கர் துவக்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் திமுக சார்பில், அக்கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மார்ச் 1ந்தேதி முதல் இம்மாதம் முழுவதும் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் மருத்துவ முகாம், இரத்தான முகாம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும், இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட 33 ஊராட்சிகளிலும் திமுக இளைஞரணிக்கு18 வயது பூர்த்தியடைந்த இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் 5 ஆயிரம் பேரை உறுப்பினராக சேர்ப்பதற்கு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இதில் அரியலூர் திமுக மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சிவசங்கர் கலந்து கொண்டு ஏராளமான இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கி முகாமை துவக்கி வைத்தார்.
இதில் வேப்பூர் ஒன்றிய செயலாளர் மதியழகன், வர்த்தக அணி மாநில துணைச்செயலாளர் பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்வி ராஜேந்திரன், ஒன்றி அவைத்தலைவர் மாணிக்கம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரசூல்அகமது, லப்பைக்குடிக்காடு நகர இளைஞரணி அமைப்பாளர் ஜெர்மன்ஜாஹீர்,
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அன்பழகன் குன்னம் ஊராட்சி கிளை செயலாளர் இளங்கோவன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மாவட்ட பிரதிநிதி கரு.மலர்வண்ணன், பிரபாகரன், மற்றும் நிர்வாகிகள் கரிகாலன், அன்பழகன், ராஜேந்திரன், கருணாநிதி உட்பட கட்சி பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.