Perambalur: DNT / DNC Welfare Board can apply for welfare assistance; Collector Information!

தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவிதொகை, இயற்கை மரணத்திற்கான உதவிதொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவிதொகை, கல்வி உதவிதொகை, திருமண உதவிதொகை, மகப்பேறு உதவிதொகை, மூக்குக்கண்ணாடி செலவுதொகை ஈடு செய்தல், முதியோர் உதவி ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற சீர் மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களாகவும், 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்களாகவும், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியா குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழில் ஈடுப்பட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்துள்ளவர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!