Perambalur: Documentless cash Rs. 1.11 lakh seized!
நேற்றிரவு 11.48 மணியளவில் வ.களத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயன் பேரையூர் பேருந்து நிறுத்தம் அருகில் ராஜா முத்துக்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி, முதல்நிலை காவலர் மணிகண்டன்,ஆயுதப்படை காவலர் கார்த்திகேயன் ஆகியோருடன் வாகன தணிக்கை செய்யும் போது காரில் வந்த அயன் பேரையூர் கிராமத்தைச் சேர்ந்த ராமராஜன் என்பவர் உரிய ஆவண மின்றி ரூ50 ஆயிரம் வைத்திருந்ததால் பறிமுதல் செய்யப் பட்டது.
அதே போல இன்று காலை, குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி அருகில் குழந்தை வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் பிரேமஜெயம் தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது காரில் ரூ. 61,000 பணத்தை உரிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் எடுத்துவந்த கடலூர் மாவட்டம், திட்டக்குடி தெற்கு தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் செந்தில்ராஜா (32) என்பவரிடமருந்து பணம் பறிமுதல் செய்தனர்.