Perambalur – Elambalur Karthika lamp on Brahma Rishi hill: MLA Tamilselvan started lighting the lamp.

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் கார்த்திகை தீபத்தையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது.

பெரம்பலூர் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் எளம்பலூர் பிரம்மரிஷிமலையில் ஆண்டுதோறும் தீப திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி 38-வது ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கொண்டாப்பட்டது. அரசு விதிமுறைக்கு உட்பட்டு பக்கதர்கள் அனுமதிக்கப்படாமல், பிரசாதம் வழங்கமாலும், எளிமையாக கொண்டாடப்பட்டது. காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன், கொரோனா தடுக்கும் விதமாக சிறப்பாக செயல்பட்டு பாஸ் உள்ளவர்களை மட்டுமே மலைக்கு மேல் அனுமதித்தனர்.

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து நேற்று காலை 6.30 மணிக்கு கோ பூஜை மற்றும் அஸ்வபூஜையும், 7 மணிக்கு 210 சித்தர்கள் யாகமும், திருவருட்பா பாராயாணமும், தீப செப்பு கொப்பறை, திரி, நெய் ஆகியவற்றுடன் சிறப்பு வழிபாடுகள் தமிழில் நடத்தப்பட்டது.

பின்னர் சுந்தரமகாலிங்கம் தலைமையில், அடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோயிலில், பெரம்பலூர் எம்.எல்.ஏ ஆர். தமிழ்ச்செல்வன் மகா தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.

பிரம்மரிஷி மலையின் மேல் 6 அடி உயரத்தில் பெரிய செம்பு கொப்பைறை வைக்கப்பட்டு அதில் 1008 மீட்டர் நீளமுள்ள திரி, 1008 கிலோ பசு நெய், 100 டின் எண்ணெய் மற்றும் 100 கிலோ கற்பூரம் கொண்டு அருட்பெருஞ்ஜோதி மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சாதுகளுக்கு வஸ்திரதானமும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழாவில், பெரம்பலூர் மாவட்ட சுகாதாரப்பணிக்குழு துணை இயக்குனர் ஆர்.கீதாராணி, திட்டக்குடி தொழிலதிபர் பி.டி. ராஜன், ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிவிநாயகம், பெரம்பலூர் பார் கவுன்சிலர் செயலாளர் வக்கீல் சுந்தரராஜன், சிவசேனா கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சசிகுமார், அக்கட்சியின் திருச்சி மண்டலத் தலைவர் பரஞ்சோதி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை மகா சித்தர்கள் டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகினி, இயக்குநர்கள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் மற்றும் மெய்யன்பர்கள் செய்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!