Perambalur: 2 cases registered against DMK members who campaigned for Arun Nehru in violation of election rules!

பெரம்பலூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேர்தல் நடத்தை விதிமுறை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நேற்று, காலை முதல் அமைச்சர் நேருவின் மகனும், திமுகவின் வேட்பாளருமான அருண்நேரு தேர்தல் பிரச்சாரம் செய்து, திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது 50க்கும் மேற்பட்ட கார்களில் அணிவகுத்தாக, தேர்தல் துறை அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேருக்கு ஆதரவாக அனுமதி பெறாமல் 50 வாகனங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. பெரம்பலூர் காவல் நிலையம் குற்ற எண் 239/24 U/S 188 IPC பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல லாடபுரம் கிராமத்தில், பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவின் தேர்தல் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில், திமுகவினர் வெடி வெடித்ததில் பொதுமக்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெரம்பலூர் காவல் நிலையம் குற்ற எண் 240/24 U/S 286 ஐபிசி பிரிவுகளின் கீழ் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!