வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் மாவட்ட வருவாய் அலுவலர் கையெழுத்துப் பிரச்சாரத்தை துவக்கிவைத்தார்.
பெரம்பலூர் : நடைபெற இருக்கும் சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும்,
வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த 50 அடி நீளமுள்ள பதாகையில் கையெழுத்துப் பிரச்சாரத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி துவங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து வாக்காளர் உறுதி மொழியை மாவட்ட வருவாய் அலுவலர் வாசிக்க பேருந்து நிலையத்திலிருந்த பயணிகள், பொதுமக்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் வாக்காளிப்பதன் அவசியத்தை உணர்த்திடும் வகையில் நடத்துனர்களின் பைகளில் தேர்தல் விழிப்புணர்வு வாகசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி ஒட்டினார். அதனை தொடர்ந்து நகராட்சிக்குச் சொந்தமான இருசக்கர வாகன நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களிலும் மற்றும் பேருந்து நிலையம் வழியாகச்சென்ற அனைத்து இருசக்கர வாகனங்களிலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய சிறுவில்லைகளை மாவட்ட வருவாய் அலுவலர் அணிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.