Perambalur Election: 23 Accepted Out of 46 Petitions Filed; 33 petitions including alternative candidates dismissed!
பாராளுமன்ற பொதுத் தேர்தல், 2024க்கான வேட்புமனு தாக்கல் 27.03.2024 அன்று முடிவடைந்த நிலையில் 28.03.2024 வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கலெக்டர் கற்பகம் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர் ராஜேந்திர குமார் வர்மா முன்னிலையில் நடைபெற்றது.
இதில் 46 வேட்பாளர்களின் 56 வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டதில் 23 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் 23 வேட்பாளர்களின் மனுக்கள் மற்றும் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்த மாற்று வேட்பாளர்கள் உள்ளிட்ட 10 மனுக்கள் என மொத்தம் 33 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட மனுதாரர்கள் விவரம்:
திமுக அருண்நேரு (காணக்கிளியநல்லூர்- லால்குடி), பி.எஸ்.பி இளங்கோவன் (திருச்சி ) அஇஅதிமுக என்.டி.சந்திரமோகன் ( துறைமங்கலம்-பெரம்பலூர்), பாஜக பாரிவேந்தர் (சென்னை), நாதக தேன்மொழி ( திருவையாறு – தஞ்சாவூர்), ஜெயக்குமார் சாமானிய மக்கள் கட்சி (தொட்டியம் – திருச்சி),
சுயேட்சைகள்:
அருண்நேரு (தழுதாழை -பெரம்பலூர்), ஆனந்தராஜு ( கவுள்பாளையம் – பெரம்பலூர்), எபினேசன் ( நன்னிமங்கலம் – லால்குடி), சம்பத் (ஆமூர்- முசிறி), சிவக்குமார் ( முசிறி), சுதாகர் ( கண்டியூர் வதியம் குளித்தலை ), தங்கமணி ( அன்பில – லால்குடி) தமிழ்ச்செல்வன் ( மருதூர் – குளித்தலை), பாரி (லால்குடி), மணி ( கொத்தாம்பட்டி – துறையூர்) மது ( கள்ளை – குளித்தலை), முத்துக்குமார் ( தென்வடல் அக்ரஹாரம் – முசிறி), முருகானந்தம் ( பொய்யாமணி – குளித்தலை), ரெங்கராஜ் ( பிள்ளையார்பாளையம் – பெரம்பலூர்), லெட்சுமணன் ( மங்கம்மாள்புரம் -லால்குடி), வாசுதேவன் ( தில்லைநகர் – திருச்சி), வீரமலை (மேலகுட்டப்பட்டி – குளித்தலை) ஆகியோரது மனுக்கள் இன்று தேர்தலில் போட்டியிட மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அரசியல் கட்சியினருக்கு அவரது கட்சி சின்னங்களும், சுயேட்சைகளுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் சின்னங்கள் வழங்கப்பட உள்ளது.