Perambalur Election: Seizure of Rs 2 lakh carried without proper documents:
பெரம்பலூர் மாவட்டம், 148, குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுகுடல் கீழப்புலியூர் இன்று மாலை சுமார் 3.15 மணி அளவில் குன்னம் வட்டம், நமையூர் கிராமத்தை சேர்ந்த தங்கராசு மகன் சங்கர் பைக்கில் ரூ. 2 லட்சம் எடுத்து வந்துள்ளார். அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், தாசில்தார் பாக்கியராஜ் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் கைப்பற்றி மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அது, மாவட்ட கருவூலத்தில் காப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.