Perambalur: Candidate Faintness; He left the campaign halfway and returned!
பெரம்பலூர் எம்.பி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் (51), இவர் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று வேப்பந்தட்டை ஒன்றியத்தில், தனது கூட்டணி கட்சியினருடன் அரசலூர், அன்னமங்கலம், தொண்டைமாந்துறை, விஜயபுரம், அய்யர்பாளையம், கோரையாறு, கொட்டாரக்குன்று, மலையாளப்பட்டி, அரும்பாவூர், பெரியம்மாபாளையம், பூலாம்பாடி, கடம்பூர், கள்ளப்பட்டி உள்ளிடக்கிய கிராமங்களில், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவரது பிரச்சார வேன் திறந்த வெளியாக இருந்ததால் தற்போது வீசும் கோடையின் வெப்பத்தை தாளாமல் மயங்கியதாக கூறப்படுகிறது. இதனால், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், உடும்பியம் உள்ளிட்ட பல ஊர்களில் மதிய உணவிற்கு பிறகு பிரச்சாரம் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆரத்தி எடுத்தப்பதற்காக ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்த பெண்கள் ஓரிரு மணி நேரங்களுக்கு பின்னர் கலைந்து சென்றனர்.
வேட்பாளருடன், அதிமுக மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர் மோகன், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, மற்றும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.