Perambalur: Female collector conducts investigation inside liquor shop: Order to dispose of plastic waste immediately!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கலெக்டர் க.கற்பகம், சென்று கொண்டிருந்தபோது இரூர் டாஸ்மாக் கடை எதிரே உள்ள காலி இடங்களில் பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் கவர்கள் என பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து கிடந்ததை பார்வையிட்ட அவர், தனது வாகனத்தை நிறுத்த சொல்லி எதிரில் இருந்த டாஸ்மாக் மதுக் கடைக்குள் சென்று திடீர் ஆய்வு செய்தார்.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது உங்களுக்கு தெரியாதா, கண்ணுக்கெதிரே இவ்வளவு பிளாஸ்டிக்குகள் பரவிக்கிடப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? என கேட்ட அவர், சற்று முன்தான் சர்வதேச பிளாஸ்டிக் இல்லா தினம் குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வை துவக்கி வைத்து விட்டு வருகிறேன். இங்கு இவ்வளவு பிளாஸ்டிக் பொருட்கள் கிடப்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.

பின்னர், பார் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை அழைத்து தன் கண்முன்னே பிளாஸ்டிக்குகளை அள்ளி மறுசுழற்சிக்கு எடுத்து செல்ல உத்தரவிட்டார். இதனையடுத்து ஊழியர்கள் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ” ஆய்வு முடித்து திரும்பும்போது இந்த இடத்தில் பிளாஸ்டிக் பொருட்களே இருக்கக்கூடாது அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். மீண்டும் இதுபோன்று பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர் அங்கிருந்து கிளம்பினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில், திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் தோல்வி அடைந்தாத என்ற சந்தேகத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், பல கிராமங்களில் வீடுகளில் வாங்கப்படும் குப்பைககள் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து மறு சுழற்சிக்கு செய்யப்படாமலேயே மொத்தமாக தீயிட்டு எறிப்பதால் பொதுமக்களுக்கு, புற்றுநோய், சுவாசம் உள்ளிட்ட உடல்நலக் கேடு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், அரசு ஒதுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வீணாகிறது என வருத்தம் சமூக ஆர்வலர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் ஆயுளை கணக்கில் கொண்டு அதிகாரிகள் இதில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுத்து சுற்றுச்சூழல் மாசுவை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!