Perambalur Fire Brigade Explains Safe Fireworks Explosion!
பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பாக பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதிலட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள போக்குவரத்து நெரிசலான பகுதிகளில் சாலைகளிலும் கைகளில் பிடித்தவாறு பட்டாசு வெடிக்கக் கூடாது. பெரியவர்களின் முன்னிலையில் சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் சமயத்தில் அருகில் வாளியில் தண்ணீர் வைத்துக்கொண்டு தளர்வான ஆடைகள் உடுத்தாமல், இருக்கமான பருத்தி ஆடைகள் மற்றும் காலணி அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் உடனே குளிர்ந்த நீரை ஊற்றி தீ பரவாமல் தடுக்க வேண்டும் என விழிப்புணர்வு தகவல்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். நிலைய அலுவலர் ப.சத்தியவர்த்தனன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் இப்பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.