Perambalur: Flower sprinkling ceremony for Sangupettai Muthu Mariamman!
பெரம்பலூர் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு முத்து மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடந்தது.
முத்துமாரியம்மன் ஆலய பூச்சொரிதலுக்கான “கால் கோள் ” நிகழ்ச்சி நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது.
இதனை முன்னிட்டு முற்பகல் 11 மணிக்கு மூலவருக்குஅபிஷேகமும், பிற்பகல் 1.00 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெற்றது. இதில் சங்குபேட்டை பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முத்துமாரிஅம்மனை வழிபட்டு அம்மன் அருள் பெற்றுச் சென்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் நகர் 19, மற்றும் 20-வது வார்டு பொதுமக்கள், கிராம காரியஸ்தர்கள், பூசாரிகள், அடங்கிய விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
நேற்றிரவு முத்துமாரியம்மனுக்கு அப்பகுதி மக்கள் பூச்சொரிதல் விழா நடத்தினர். வரும் மே 28ஆம் தேதி அன்று திருத்தேர் திருவிழா நடக்க உள்ளது.