Perambalur: Fresh daily vegetable market at Poolampadi; Opening Ceremony Tomorrow: Businessman DATO S PRAKADEESH KUMAR , invited!

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் பிளஸ் மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில், தினசரி காய்கறி சந்தை திறப்பு விழாவிற்கு விவசாயிகள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டுமென தொழிலதிபர் டத்தோ.பிரகதீஸ்குமார் வெளியிட்டுள்ள அழைப்பில் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் நாளை 25ந்தேதி புதன்கிழமை மதியம் 12 மணி அளவில் பிளஸ் மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தினசரி காய்கறி சந்தை மிகப்பிரம்மாண்டமாய் திறப்பு விழா காண இருக்கிறது. விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் கற்பகம், எம்.எல்.ஏ பிரபாகரன், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ரவி உட்பட பலர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் டத்தோ பிரகதீஸ்குமார் தலைமையில், ப்ளஸ் மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் குழுவினர் செய்து வருகின்றனர்.

பூலாம்பாடியில் மிகப்பிரமாண்டமான காய்கறி சந்தைக்கான பணி, ஒவ்வொரு விவசாயிகளின் முழு ஒத்துழைப்பினால் இது சாத்தியமாகி உள்ளது. காய்கறி சந்தை திறப்பு விழாவை ஒவ்வொருவரும் தன்னுடைய குடும்ப நிகழ்ச்சியாக கருதி, திறப்புவிழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உற்றார் உறவினர்களுடன் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும்.

இது எந்த அரசியல் சார்ந்தும் இல்லை. நமக்கான நிகழ்வு. நம்பகுதி விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போகும் நிகழ்வு. இந்த காய்கறி மார்க்கெட் ஒட்டன்சத்திரம், தலைவாசலில் உள்ளது போல் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டு இங்கிருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது என்பதும், இதன்மூலம் சுற்றுப் பகுதிகளில் உள்ள சுமார் 15 ஆயிரம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரப்போகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு, தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, திறப்புவிழா நிகழ்ச்சியில் அனைவரும் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!