Perambalur: Ganja case arrests goondas act!

பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் 25 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்தவர்களை பிடித்து பாடாலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பெரம்பலூர் ஆலம்பாடி ரோடு எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் கமல் (30), பெரம்பலூர் சங்குபேட்டை ராதாதகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தமிழ்ச்செல்வன் (28) ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற கலெக்டர், குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.










kaalaimalar2@gmail.com |
9003770497