Perambalur: Gold chain snatched from old woman!
பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் வீட்டில் படுத்திருந்த முதியவர் ஒருவரிடம் அடையாளம் தெரியாத ஒரு நபர் செயினை பறித்து சென்றது குறித்து
செட்டிக்குளம், தெற்கு தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி மனோன்மனைவி (77). அவருடைய வீட்டில் தனியாக நேற்றிரவு 11.00 மணியளவில் வீட்டில் காற்றுக்காக வீட்டை தாழிடாமல் தூங்கி கொண்டிருந்த போது, வீட்டினுள் புகுந்த மர்ம நபர் மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் தங்கசெயினை பறித்து சென்றார். இது குறித்து மூதாட்டி, கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து பாடாலூர் போலீசார் கொள்ளையனை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாக கொள்ளையர்களின் கைவரிசை நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது.