Perambalur: Gold jewelery snatched from woman!
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறையூர் சாலையில் உள்ள கல்யாண் நகரை சேர்ந்தவர் செந்தாமரைகண்ணன் மனைவி வாசுகி (50). இன்று காலை அவரது மகளை பள்ளிக்கு பஸ் ஏற்றி விட்டு வந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் 6.5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் அப்பகுதியில் சிசிடிவி கேமராக்களில் காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.