Perambalur Government College cleaners dharna strike!
பெரம்பலூர் அருகே குரும்பலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக துப்புரவு பணியாளராக 5 க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக இவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை எனவும், மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரியின் முதல்வர் அழைத்து இனி கல்லூரிக்கு வர வேண்டாம் எனவும், அவ்வாறு வந்தால் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே வேலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக கல்லூரியில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர்கள் உயர் கல்வித் துறை அமைச்சர் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக வேந்தர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து கோரிக்கையாக மனு அளித்துள்ளனர். ஆனால், நடவடிக்கை ஏதும் இல்லாததால், கடந்த 2 நாட்களாக கல்லூரியின் வாசலிலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தங்களுக்கு இதே கல்லூரியில் பணி நிரந்தரம் மற்றும் நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கூறி வாட்டி வதைக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் கல்லூரியின் வாசலிலேயே தர்ண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.