Perambalur Government Hospital Rs. 6 crore worth MRI. Scan Chief Minister K. Palanisamy inaugurated the video Conference
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ. 6 கோடி மதிப்பிலான எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் ஆர்.டி.ராமச்சந்திரன் (குன்னம்), இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்) ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டனர். இணை இயக்குநர் திருமால், துணை இயக்குநர் கீதாராணி, கண்காணிப்பாளர் தர்மலிங்கம், இருக்கை மருத்துவர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.