Perambalur government school teacher arrested in case of film director’s murder!

பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் பாரில் கடந்த ஜுன் 5ம் தேதி, பிறந்த நாள் மற்றும் திருமண நாளை கொண்டாடிய பிரபல ரவுடியும், திரைப்பட டைரக்டருமான, செல்வராஜ், (எ) அப்துல்ரகுமான், நண்பர்கள் உறவினர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த போது, மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.

பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். திருச்சி நீதிமன்றத்தில், பெரம்பலூரை சேர்ந்த சரவணன் (23), சரணடைந்தார். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், பெரம்பலூரில், ரவுடி செல்வராஜின் வளர்ச்சியால், அம்மாபாளையத்தை சேர்ந்த அழகிரி தரப்பிற்கு தொழில் போட்டி ஏற்பட்டதோடு, பஞ்சாயத்து செய்வதில், வருமானம் பாதிக்கப்படுவதோடு, செல்வாக்கு குறைவதாக கருதிய சிறையில் இருக்கும் அழகிரி தனது மனைவி சங்கீதா மூலம் திட்டம் தீட்டி கொலை செய்தது தெரியவந்தது.

அதற்கு உடந்தையாக இருந்த, திருச்சி ஹோப்பில் வசிக்கும் அழகிரியின் தங்கை ரமணி (34), ரமணியின் கணவர் பிரேம் ஆனந்த (45), பெரம்பலூர் மேட்டுத் தெருவை சேர்ந்த, மனோகரன் மகன் அபினாஷ் (22), துறையூர் வடமலை சந்தை சேர்ந்த சேகர் மகன் நவீன் (20), பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரியை சேர்ந்த நவீன் (19), மற்றும் ஆலம்பாடியை சேர்ந்த சிறுவன் ஒருவனையும்,
அழகிரி மனைவி சங்கீதாவையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கில் 19 பேர் தொடர்புடைய நிலையில், பெரம்பலூர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் ஜெயபாலாஜி, 4 மாதங்களுக்கு முன்பு சிறையில் சென்று அழகிரியை பார்த்து வந்தது மற்றும் போன் கால்களை ஆய்வு செய்து, அந்த தொடர்பில் இருந்ததோடு, டைரக்டரை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டியதை உறுதிப்படுத்திய போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சாந்தாதேவியும், அவரது கணவர் குமார். இவர் அரசு பஸ் டிரைவராகவும், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவருராகவும் உள்ளார். இவர்கள் உறவினர்கள் ஆகியோர் நேற்று காவல் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாந்தாதேவி தெரிவித்தாவது: திருச்சி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காரில் சென்ற போது, உடன் அவரது மகன் மாறன் (24), தங்கை மகன் லோகேஷ் (19) ஆகியோரை தனிப்படை போலீசார் அழைத்து சென்று மறைமுகமான இடத்தில் விசாரணை நடத்துவதை விட்டு விடுவிக்க தர்ணாவில் குடும்பத்துடன் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக சென்றனர்.

பின்னர் விசாரணை முடிந்தவுடன் மாறன், லோகேஷை விடுவித்த நிலையில், நேற்றிரவு, கொலை வழக்கில் கைதான ஜெயபாலாஜியின் மனைவியும், அரசு பள்ளி ஆசிரியையுமான சுலோச்சனா (41) என்பவரை போலீசார் கைது செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீசார் இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் தீவிரமாக தேடிவருகின்றனர். இச்சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!