Perambalur: Govt bus stopped at tollbooth for half an hour due to lack of money on Fast Tag; Viral video!!

Model

அரசு பஸ்சின் ஒன்றின் பாஸ்ட் ட்ராக்கிங் பாஸ்ட் டேக்கில் பணம் இல்லாததால் சுங்கச்சாவடியை கடந்து செல்ல முடியாமலும், அங்கிருந்த ஊழியர்கள் பஸ்சை கடந்து செல்ல அனுமதிக்காததால் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக சுங்கச்சாவடியிலேயே அரசு பஸ் நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருமாந்துறையில் சுங்கச்சாவடி வசூல் மையம் உள்ளது. இந்நிலையில் நேற்று கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட அரசு பேருந்து ஒன்று திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது திருமாந்துறை சுங்க சாவடியில் பேருந்து கடக்க முயன்ற போது அந்தப் பேருந்தின் பாஸ்டாக்கில் போதிய கட்டணம் இல்லாததால் சுங்கச்சாவடி வழியாக பேருந்து செல்ல சுங்கச்சாவடி ஊழியர்கள் அனுமதிக்கவில்லை .இதனால் பேருந்தானது சுங்கச்சாவடியிலேயே 30 நிமிடத்திற்கு மேலாக ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் பஸ்சில் பயணம் செய்த சில பயணிகள் வேறு வழியில்லாமல் வேறு பேருந்தில் ஏறி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள்30 நிமிடம் கழித்து பாஸ் டேக்கில் கட்டணம் செலுத்தப்பட்ட பிறகு பஸ் சுங்கச்சாவடியை கடந்து சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.

பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மிகுந்த அவதி அடைந்தனர். பாஸ்ட் ட்ராக்கில் பணம் செலுத்தாமல் சுங்கச்சாவடியில் அரசு பஸ் நின்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!