Perambalur: Govt buses will soon be ticketed through UPI like G-Pay: Transport Minister Sivashankar Interview!

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் இன்று திறந்ததை முன்னிட்டு பெரம்பலூர் முத்துநகர் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேரும் குழந்தைகளுக்கு எட்டு வகையான பரிசுப் பை மற்றும் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து புத்தகங்களையும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். கலெக்டர் கற்பகம், எம்எல்ஏ பிரபாகரன், சப் கலெக்டர் கோகுல், பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, திமுக பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது‌. இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்கினார். மாணவ மாணவிகளுடன் சேர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.‌எஸ்‌.சிவசங்கர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு எங்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்ட நிலையில் புதிய இலவச பேருந்து அட்டை (பஸ் பாஸ்) வழங்கும் வரையில் பழைய பஸ் பாஸ் அல்லது சீருடையில் வரும் மாணவ மாணவிகளை பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து போக்குவரத்து துறை ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே மாணவ மாணவிகள் சிரமமின்றி பள்ளிக்கு சென்று வரலாம் எனவும் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படியில் பயணம் செய்வதை தவிர்க்கும் நோக்கில் புதிய பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொறுத்தப்பட்டு வருவதை போன்று தமிழக முழுவதும் இயக்கப்பட்டு வரும் பழைய பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட உள்ளதாக தெரிவித்த அமைச்சர், சென்னையில் பேருந்து நிறுத்தங்களில் பேருந்து வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் டிஜிட்டல் பெயர் பலகை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உலக வங்கி நிதி உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது.

பரிசாத்த முறையில் இத்திட்டம் சென்னையில் முதற்கட்டமாக 3000 பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவிப் பொருத்தி செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் இத்திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் தமிழக முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அரசு பேருந்துகளில் UPIமுறையில் பேருந்து கட்டணம் வசூலிக்கும் முறை சென்னையில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!