Perambalur: Govt Honors Organ Donor; Makkal Shakti Iyakkam provided financial support!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சீ. கிருஷ்ணன். தூய்மை பணியாளர் இவர் கீழே விழுந்து மூளைச்சாவு அடைந்து இறந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
அதனை பாராட்டி தமிழ்நாடு அரசு சார்பில் பெரம்பலூர் சார்- ஆட்சியர் கோகுல் தலைமையில் அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் உடலுறுப்பு தானம் செய்த கிருஷ்ணன் வீட்டிற்கு நேரில் சென்ற மாநில துணைத் தலைவர் க. பெரியசாமி, மாவட்ட செயலாளர் ஜி. சிவக்குமார், மாவட்ட பொருளாளர் சி. வெங்கடாசலம், மாவட்ட இணைச் செயலாளர் மா. ரமேஷ், வேப்பந்தட்டை ஒன்றிய பொறுப்பாளர் இரா. இரவி, பெரம்பலூர் நகர பொறுப்பாளர் சி. காமராஜ், பெரம்பலூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் து. வாஞ்சிநாதன், பெரம்பலூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் என். பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அவரது படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியும், அந்த குடும்பதினரை பாராட்டி, கவரவிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி பாராட்டு சான்றிதழும், நிதி உதவியும் வழங்கினர்.
.