Perambalur: Govt Polytechnic Direct 2nd year admissions going on: Principal informs!

பெரம்பலூர் மாவட்டத்தில் 2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் நேரடி 2ம் ஆண்டு முழுநேரம் தொழில்பயிற்சியுடன் கூடிய பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இணையதளம் மூலமாக 20.05.2024 வரை நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள் : https://tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் அல்லது கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

டிப்ளமோ தொழில் நுட்பக் கல்வி பாடப்பிரிவுகளான அமைப்பியல் துறை (சிவில்), இயந்திரவியல் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் (EEE), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (ECE), கணிப்பொறியில் துறை ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்ப கட்டணம் 150 ரூபாய் மட்டுமே, மாணவர்கள் பதிவு கட்டணத்தை கிரிட், டெபிட் மற்றும் நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம். SC,ST மாணவ, மாணவியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய 20.05.2024 அன்று கடைசி நாளாகும்.

இதற்கான கல்வித் தகுதி நேரடி இரண்டாமாண்டு பட்டயச் சேர்க்கைக்கு மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், இயற்பியல், கணிதவியல், வேதியியல், கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில் நுட்பம், உயிரியியல், உயிரி தொழில் நுட்பவியல், தகவல் தொழில் நுட்பவியல், வேளாண்மை (அல்லது) 10- ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டுகள் தொழில் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இக்கல்லூரியில் தரமான கல்வி மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள். ஸ்மார்ட் கிளாஸ் வசதி (Smart class room) அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள் (Fully Equipped Laboratory) மாணவர்களுக்கு அரசு இலவச விடுதி, மாணவியர்களுக்கு கல்லூரிக்கு எதிரில் அரசு இலவச விடுதி, இருபாலருக்கும் அரசின் கல்வி உதவித்தொகை, 2023 -2024 ம் கல்வியாண்டில் இக்கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் 6 மாணவியர்கள் ரூ.50,000- பிரகதி கல்வி உதவித்தொகை பெற்றுள்ளனர். மீதமுள்ள ரூ.1,00,000- அடுத்தடுத்த கல்வியாண்டில் உதவித்தொகை பெற உள்ளார்கள்.

தகுதியுடைய மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்க்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இலவச பஸ் பாஸ் வேலைவாய்ப்பு பிரிவின் மூலமாக மூன்றாமாண்டு இறுதியிலேயே வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

2023 – 2024 ஆம் கல்வியாண்டின் இறுதியாண்டில் பயின்ற 167 மாணவர்களின் 100% மாணாக்கர்களுக்கு கம்பெனியில் வேலை வாய்ப்பு பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும் குறைந்தப்பட்ச சம்பளம் மாதம் 15,000 முதல் 21,000 வரை பெற்றுள்ளார்கள். கல்வி கட்டணம் இல்லை சிறப்பு கட்டணம் மற்றும் வளர்ச்சிக் கட்டணம் – ஆண்டு ஒன்றுக்கு ரூ.2,200 மட்டுமே மூன்று ஆண்டுகளில் பட்டய படிப்பை ரூ.6,600- க்குள் படித்து முடித்து விடலாம்.

மாணவர் சேர்க்கை மற்றும் இணைய வழியில் விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்கள் அறிய அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, கீழக்கணவாய், பெரம்பலூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது 04328-243200, 9443708597, 8778934178,8610933968, 9976867331, 9994333392, 9865560687. கீழ்க்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!