Perambalur; Govt school teachers mysterious case, 2 SSI Temporary dismissal of: SP order!
பெரம்பலூர் அருகே கடந்த நவம்பர் மாதம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருவர் மாயமான வழக்கில், கவனக்குறைவுடன் பணியாற்றியதாக 2 ஸ்பெசல் சப்-இன்பெக்டர்களை தற்காலிக பணிநீக்கம் செய்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றிய தீபா (42), அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய வெங்கடேசன் (44) ஆகியோர் கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி பள்ளி வேலை நேரத்திற்கு பின்னர் மாயமாகினர்.
இது தொடர்பாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் காணாமல் போன அறிவியல் ஆசிரியர் வெங்கடேசனின் மனைவியும், வி.களத்தூர் காவல் நிலையத்தில் ஆசிரியை தீபாவின் கணவரும் தனித்தனி புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இரு ஆசிரியர்களையும் தீவிரமாக தேடி வரும் நிலையில், வழக்கில் கவனக் குறைவோடு பணியாற்றியதாக பெரம்பலூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாண்டியன், வி. களத்தூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முகமது ஜியாவுதீன் ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி ஷ்யாம்ளாதேவி தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.