Perambalur: Heat touches 106 °F degrees: People paralyzed in homes due to scorching sun!
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளை இந்த கடும் வெப்பம் நிலவுகிறது. அதனால் பொதுமக்கள் கடும், அவதி அடைந்து, வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.மேலும், பொதுமக்கள் பகல் நேரங்களில் பஸ்களில் பயணிப்பதை ரத்து செய்துள்ளனர். நெடுந்தூர பஸ்கள் இருக்கை பெரும்பாலும் காலியாக உள்ளது.
மேலும், வாட்டர் கேன் வியாபாரம் அதிக விறுவிறுப்ப அடைந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளரி, தர்பூசணி, நுங்கு, முலாம்பழம், எலுமிச்சை பழம் நல்ல விற்பனையை எட்டி உள்ளது. நீர்நிலைகளிலும், கிணறுகளிலும், சிறுவர்கள், மக்கள் குதித்து வெப்பத்தை தணித்து வருகின்றனர்.
இரவில் வெப்பக்காற்று அதிகமாக இருப்பதால், சிறிய வீடுகளில் வசிப்பவர்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தாகம் தணிக்க தயிர், மோர் நன்றாக பயன்படுத்துகின்றனர்.
இன்று பெரம்பலூர் மாவட்ட்தில் அதிகபட்ச வெப்பநிலை 106 °F டிகிரியாகவும், குறைந்தபட்சம் 81 °F டிகிரியாகவும் பதிவாகி உள்ளது. இன்னும் அக்னி நட்சத்திரம் தொடங்கினால் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்குமா என பொதுமக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.