Perambalur: Heat wave – construction workers to rest from 12 noon to 3 pm; Board Chairman Pon.Kumar information!

பெரம்பலூர்: கட்டுமான தொழிலாளர்கள் இன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஆத்தூர் சாலையில் உள்ள அன்பு திருமண மண்டபம் வரையில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த கூட்டத்தில் பொன்.குமார் பேசியதாவது:

தமிழகத்தில் 18 வாரியங்கள் உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்தனை வாரியங்கள் கிடையாது. தமிழகத்தில் இத்தனை வாரியங்களை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

காலை உணவுத் திட்டம், பெண்கள் இலவச பேருந்து பயணம், உயர்கல்வித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழகத்தை பின்பற்றி கனடா மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கட்டிடத் தொழிலாளர்கள் ஓய்வு பெற்றால் ரூ.1000 ஆக உள்ளதை, முதலமைச்சரிடம் பேசி ரூ.2000 ஆக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழிலாளர்களின் உரிமைக்காக உருவாக்கப்பட்ட நாள் மே-01. 1982 எம்.ஜி‌.ஆர்.முதல்வராக இருந்தபோது தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக ரூ.10‌.ஆயிரம் கேட்டு அவரது வீட்டிற்கு முன்பு 428 பேர் மறியல் போராட்டம் செய்தோம்.

அவர் எதுவும் வழங்கவில்லை. எங்களை சிறையில் அடைத்தார். தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழிலாளர்கள் இறந்தால் ரூ.5 லட்சம் என்று அறிவித்துள்ளார். 3 3 லட்சம் உறுப்பினர்கள் இருந்த இந்த கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தில், கடந்த அ.தி.மு.க.ஆட்சியில் 10 லட்சமாக குறைந்துவிட்டது.

தற்போதைய தி.மு.க.ஆட்சி வந்த பிறகு 15 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். தற்போது மொத்தம் 25 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கட்டிடத்தை தோல்வி பயத்தில் பிரதமர் மோடி உளறி வருகிறார். 44 சட்டங்களை குறைத்து, 4 சட்டமாக மாற்ற பிரதமர் முயற்சி செய்து வருகிறார்‌.

பருவநிலை மாற்றம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெயிலால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வெயலின் தாக்கத்தில் இருந்து கட்டுமான தொழிலாளர்களின் உடல் அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்க மதியம் 12 மணிமுதல் 3 மணி வரை பணியில் இருந்து ஓய்வளிக்க வேண்டும், இல்லை எனில், வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும், தமிழ்நாடு அரசு செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவித்தார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் தொழிலாளர்கள் சட்டம் பாதுகாக்கப்படும். தொழிலாளர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்று பொன்.குமார் பேசினார். இந்த கூட்டத்தில், தி.மு.க.பெரப்பலூர் மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கட்டுமானம் மற்றும் மனைப்பிரிவு மாநில இணைச் செயலாளர் பொறியாளர் சிவக்குமார், கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட தலைவர் சிவபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!