perambalur hospitalized collector analysis: The demand to provide treatment for feet

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு இன்று ஆட்சியர் சாந்தா பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார்.

“பல்வேறு நோய்களுடன் இம்மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகள் விரைவில் குணமடையும் வகையில் மருத்துவமனை வளாகம் முழுவதும் தூய்மையாக பராமாpக்க வேண்டும். மேலும், நோயாளிகளின் வசதிக்காக மருத்துவமனைக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் உடனடியாக நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார். மேலும் அறுவை சிகிச்சை அரங்கம் சென்ற மாவட்ட ஆட்சியர் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து நோயாளிகளின் இருக்கைக்கு சென்று நோயாளிகளிடம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உடல் உபாதையை குறித்தும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது ஆட்சியர் வருகை அறிந்த பெண் நோயாளியின் மகள் ஆட்சியர் சாந்தாவின் காலில் விழுந்து, தனது தாய்க்கு முறையாக குணமாகும் வரை சிகிச்சை வழங்காமல் வெளியேற்ற முயற்சிப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரின் காலில் விழுந்து வேண்டிக் கொண்டார். அங்கிருந்த மக்கள் கும்பலாக கூடி விட்டனர். பின்னர், ஆட்சியர் மருத்துவர்களை அழைத்து உரிய சிகிச்சை வழங்க கேட்டுக் கொண்டார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!