Perambalur: If BJP candidate Parivendar wins, Union Minister! Therefore, the coalition party volunteers who are doing election work enthusiastically!
பெரம்பலூரில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி சூடு பிடித்துள்ளது. களத்தில், திமுக, பாஜக, அதிமுக, நாதக மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 23 பேர் போட்டியிட்டாலும், போட்டி என்னவோ தாமரையா? சூரியனா? என பாஜகவும் திமுகவும் நேரடியாக களம் காண்கின்றனர். இதில் இரு தரப்பிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என முனைப்போடு முழு மூச்சாக பாஜக கூடடணி தொண்டர்களும், திமுக கூட்டணி தொண்டர்களும் போட்டி போட்டுக் கொண்டு களப்பணி செய்து வாக்குகள் சேகரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நட்சத்திர தொகுதியாக பெரம்பலூர் பார்க்கப்படுகிறது. பாஜக சார்பில் ஐஜேகே நிநுவனர் பாரிவேந்தரும், திமுக சார்பில் அமைச்சர் நேருவின் மகன் அருண்நேருவும் மோதுகின்றனர். இதில இரு தரப்பும் தீரமாக களம் கண்டு வரும் வேளையில், பாஜக சார்பில் தாமரையில் போட்டியிடும் பாரிவேந்தர் மத்தியில் பாஜக வென்றால் கேபினட் அந்தஸ்து மினிஸ்டர் ஆவார் என்றும், மீண்டும் வட இந்தியாவில் பாஜகதான் 400 இடங்களை பிடிக்கப் போகிறது என உறுதியாக நம்பும், பாஜக, ஐஜேகே, பாமக, ஓபிஎஸ் அணி, அமமுக, தாமக, தமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் படு உற்சாகமாக வேலை பார்த்து வருகின்றனர். பாரிவேந்தர் மத்திய அமைச்சரானால் இன்னும் பல நூறு கணக்கான கோடி திட்டங்களை அள்ளி கொண்டு வந்து சேர்ப்பார் என பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி மக்களிடையே நம்பிக்கை பிறந்துள்ளது. மேலும், பரிவேந்தரோ ஒரு மேலாக சென்று தான் செய்த 5 ஆண்டு சாதனைகளை புத்தகமாக போட்டு வழங்கி வருகிறார். வித்தியான வேட்பாளராக பாரிவேந்தர் இருப்பதால், பொதுமக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
பிற அரசியல்வாதிகள், தொகுதிக்கு வரும் திட்டத்தில் சம்பாதிப்பார்கள், ஆனால், பாரிவேந்தர் தான் சம்பாதித்த பணத்தை பல நூறு கோடி ருபாய்களை தொகுதி மக்களுக்காக செலவு செய்து உள்ளார். வரும் காலத்திலும் செலவு செய்வார் என்பதில் உறுதியாக உள்ள தொண்டர்கள் பாரிவேந்தரை வெற்றி பெற கங்கணம் கட்டிக் கொண்டு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
மேலும், பாரிவேந்தர் நல்ல அனுவத்துடன் பக்குவம் அடைந்தவர். அணுகுமுறை சிறப்பாக உள்ளது என்பதாலேயே தொகுதி மக்களுக்கு நன்கு பிடித்து போய்விட்டது. தன்னை நாடி வருவோருக்கு இல்லை என முகம் கோணாமல் மனமார உதவிகளை செய்துள்ளார். தற்போது அந்த உதவிகளே , தேர்தல் நேரத்தில் மிக பக்க பலமாக உள்ளது.