Perambalur: IJK party members have complained to the district election officer that DMK MLA is threatening with police support!

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில், பாஜகவின் கூட்டணியில் தாமரை சின்னத்தில், வேட்பாளராக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். அதற்காக முசிறி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரராக ஏகேடி வரதராஜன் என்பவர் உள்ளார். அவர் முசிறியில் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி தேர்தல் பணிகளை செய்து வருகிறார். அவர் இன்று பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கற்பகத்திடம், அவரது கூட்டணி கட்சியனிருடன் வந்து கொடுத்த மனுவின் சுருக்கம்:

ஏகே.டி வரதராஜன் தங்கியிருந்து. அவரது அறையில் பணம் கட்டுகட்டாக இருப்பதாக எழுப்பட்ட புரளியின் பேரில், முசிறி டிஎஸ்பி யாஷ்மின் தலைமையில் போலீசாரும், முசிறி எம்.எல்.ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட திமுக வெளியே திரண்டு இருந்த நிலையில், அவரது அறை நேற்றிரவு சோதனையிடப்பட்டுள்ளது. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஆத்திரமடைந்த திமுகவினரும், எம்.எல்.ஏ காடுவெட்டி தியாகராஜனும், ஐகேகே கட்சியினரை அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகாளல் திட்டியபோடு, பெண்கள் தொடர்பான வழக்கு, வன்கொடுமை மற்றும் போதை பொருள் போன்ற பல்வேறு வழக்குகளை தேர்தல் முடிந்த உடன் அவர்கள் ஆளும் கட்சியாக இருப்பதால், பல பொய் வழக்குகளை போட்டு சீரழித்து விடுவோம் என்றும், தொகுதியில் கட்சிப் பணி செய்யக் கூடாது என்றும், கடந்த ஆட்சியில் எங்கள் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று விட்டு தற்போது எங்களுக்கு எதிராகவே வேலை செய்கீறார்களா என மிரட்டுகிறார்கள். எனவே அவர்கள் மீது விசாரணை உரிய நடவடிக்கை எடுப்பதோடு தேர்தல், முடியும் வரை எங்களுக்கு நியாமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், மேலும், தொகுதியில் எங்கள் வேட்பாளர் பாரிவேந்தருக்கு கூடும் கூட்டத்தையும், வெற்றி முகத்தில் உள்ளதை கண்டும் காழ்புணர்ச்சியில் செய்வதை தடுக்க வேண்டும் மனுவில் தெரிவித்து இருந்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் கற்பகம், திருச்சி போலீஸ் எஸ்.பிக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்த தெரிவிப்பதாக தெரிவித்தார். மேலும், அச்சம்பவம் முசிறி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!