Perambalur: In Aladhur Union, Rs. 6.53 crore work started by the Minister of Transport!
போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.6.53 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலமாத்தூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகிய திட்டத்தின் கீழ் ரூ.45.65 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டடம் கட்டும் பணி, ஜெமின் ஆத்தூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.05 லட்சம் மதிப்பீட்டில் மாரியம்மன் கோவில் வீடு முதல் சின்னத்தம்பி வீடு வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ராமலிங்கபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகிய திட்டத்தின் கீழ் ரூ.32.21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டும் பணி,
அருணகிரிமங்கலம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய குழந்தைகள் மைய கட்டிடம் கட்டும் பணி, கொளத்தூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் மருதையாற்றின் கிளையாற்றில் தூர் வாரும் பணி, கூடலூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.47 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளையன் வீடு முதல் மாரியம்மன் கோவில் வீடு வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணி,
கொட்டரை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.31.61 லட்சம் மதிப்பீட்டில் கொட்டரை அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டும் பணி, தெரணி ஊராட்சியில் நெடுஞ்சாலை துறையின் மூலம் ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் காரை-தெரணி-ஊட்டத்தூர் சாலை அகலப்படுத்தி பலப்படுத்தும் பணி,
கொளக்காநத்தம் ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் பொது நூலக கட்டிடம் கட்டும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.23.53 லட்சம் மதிப்பீட்டில் எம்.பி.சி காலனி குறுக்கு தெருவில் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய சிமெண்ட் சாலை அனைத்தும் பணி என மொத்தம் ரூ.6.13 கோடி மதிப்பீட்டில் 29 புதிய பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த பணிகள் அனைத்தும் மிக விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை துரிதமாக மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொளக்காநத்தம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.39.50 லட்சம் மதிப்பீட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கட்டிய இரண்டு வகுப்பறை கொண்ட கட்டிடத்தை திறந்து வைத்ததார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொதுமக்கள் நலன் கருதியும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் முறையாக, முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என அமைச்சர் தெரிவித்தார்.
ஆலத்தூர் யூனியன் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.