Perambalur: In competition with DMK, AIADMK also broke the rules and campaigned in about 40 cars! Children also participate in school uniform!
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் அனைத்து கட்சிகளும் தொடங்கி உள்ளது. இன்று காலை செங்குணத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் பிரச்சாரத்தை பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்குணம் கிராமத்தில் தொடங்கினார்.
முன்னாள் அமைச்சர்கள் வரகூர் அருணாச்சலம், பரஞ்சோதி, மோகன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வேட்பாளர் வந்த பிரச்சார வாகனத்துடன் சுமார் 40 கார்கள் அணிவகுத்து சென்றன. பிரச்சாரத்தில், பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தனர். அவர்களுக்கு ஆங்காங்கே கவனிக்கப்பட்டது. மேலும், வரவேற்பில் கவுள்பாளையம் உள்ளிட்ட சில இடங்களில் விதிகளை மீறி பள்ளி சீருடையுடன் சிறுவர், சிறுமியர்கள் ஆரத்தி தட்டுடன் நின்றிருந்தனர்.
மேலும், வேட்பாளர் சென்ற வாகனத்திற்கு பின்னால் காரில் வந்தவர்கள் வேட்பாளருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபடாமல் காருக்குள்ளையே அமர்ந்திருந்தனர். க.எறையூர் கிராமத்தில் வேட்பாளர் வரவேற்பு மற்றும் ஆரத்தி முடிந்தவுடன் மைக்கில் வேட்பாளர் வாக்கு கேட்கவில்லை. கூட்டணி கட்சியினரும் அதிகளவில் இல்லை.
வாக்காளர்களிடம் வண்டியில் ஏறி வாக்குகள் கேட்கும் முன்னரே அடுத்த கிராமத்திற்கு உடன் வந்த கட்சியினர் அவசர அவசமாக வேட்பாளரை அழைத்து சென்றனர். அங்கிருந்த கட்சியினர் வாக்கு கேக்க வந்தார்களா!அல்லது வரவேற்பை ஏற்க வந்தார்களா என கேள்வி எழுப்பிய படி சென்றனர்.
அதிமுவிற்கு அதிகளவு வாக்கு வங்கி இருந்தும், முறையாக பிரச்சாரம் மேற்கொள்ளாததால் கணிசமான ஓட்டுகள் மாற்றுக் கட்சிக்கு விழ வாய்ப்பு உள்ளது.
வேட்பாளர் மக்களிடம் வாக்கு கேட்கவே யோசிக்கிறார். கேட்கலாமா வேண்டாமா என! எனவே, தேர்தலில் களம் கண்டவர்கள் வேட்பாளருக்கு உரிய வழிகாட்டல் செய்ய வேண்டும் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.