பெரம்பலூர் அருகே வேலை கிடைக்காததால் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்து மகன் ரகுராம்(20).இவர் படித்து முடித்து விட்டு சரியான வேலைகிடைக்காமல் வீட்டிலிருந்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கும் வீட்டிலுள்ளவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த ரகுராம் வீட்டில் யாரும் இல்லாதபோது துõக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவல் தெரிந்த மங்களமேடு போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.