Perambalur: In Kunnam constituency, Minister Sivashankar laid the foundation stone for Rs 3.44 crore project and inaugurated the completed works.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.44 கோடியில் கலெக்டர் கற்பகம் தலைமையில் இன்று பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
மூங்கில்பாடி ஊராட்சியில் சரவணன் வீடு முதல் ஒடந்துரையான் கோவில் வரை ரூ.7,50,000 மதிப்பீட்டில் ஓரடுக்கு மெட்டல் சாலை அமைக்கும் பணி, ஒதியம் ஆதிதிராவிடர் தெருவில் ரூ.27,00,000 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ஒதியம் மேற்கு தெருவில் துர்கா வீடு முதல் வண்டி சுப்பிரமணியன் வீடு வரை ரூ.13,50,000 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ஒதியம் மேற்கு தெருவில் நடராஜன் வீடு முதல் வண்டி சுப்பிரமணியன் வீடு வரை ரூ.16,50,000 மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி, ஒதியம் சுத்து குளம் முதல் வடக்கு புதிய ஏரி காடு வரை ரூ.16,45,000 மதிப்பீட்டில் ஓரடுக்கு மெட்டல் சாலை அமைக்கும் பணி,
அசூர் கலியன் காடு முதல் சமுத்திர கேணி வரை ரூ.25,00,000 மதிப்பீட்டில் ஓரடுக்கு மெட்டல் சாலை அமைக்கும் பணி, அசூர் பீல்வாடி சாலையில் ரூ.25,00,000 மதிப்பீட்டில் ஓரடுக்கு மெட்டல் சாலை அமைக்கும் பணி, எழுமூர் அருந்ததியர் தெருவில் ராமர் வீடு முதல் பங்காரு பெரியசாமி வீடு வரை ரு.8,45,000 மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, கல்லை ஓம்சக்தி கோவில் முதல் தார்ரோடு வரை ரூ.14,40,000 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, அந்தூர் ஆதிதராவிடர் தெருவில் அழகம்மாள் வீடு முதல் அஞ்சலை வீடு வரை ரூ.9,40,000 மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, வரகூர் தெற்கு தெருவில் ரூ.12,60,000 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பெரியவெண்மணி வடக்கு தெருவில் ரூ.12,00,000 மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி என ரூ.3.28 கோடி மதிப்பீட்டில் 29 புதிய பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மேலும், பெரியம்மாபாளையம் ஊராட்சி கரம்பியத்தில் ரூ. 15,83,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கட்டடம் இன்று திறந்துவைக்கப்பட்டது. ஒதியம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் தி.மதியழகன், மருவத்தூர் ராஜேந்திரன் பலர் கலந்து கொண்டனர்.