Perambalur: In Labbaikudikadu, Minister Sivashankar gave free house patta to 25 people.
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு ஜமாலியா நகரில் வசித்து வரும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் 25 பயனாளிகளுக்கு முதல் கட்டமாக விலையில்லா இலவச வீட்டுமனை பட்டாக்களை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் கற்பகம் தலைமையில் நேற்று, கிழக்கு பள்ளிவாசலில் வழங்கினார். மேலும், விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், மானிய விலையில் வழங்கினார்.
லப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஜாஹிர் உசேன், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சிதுறை பணியாளர்கள் உள்ளிட்ட திமுகவினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.