Perambalur: In Sirukanpur Rs. 32 lakh worth of works; Aladhur Chairman N. Krishnamurthy inaugurated the event.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிச் திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சத்தில் பல்வேறு பணிகளுக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிச் திட்டத்தின் கீழ் ரூ.10.64 லட்சத்தில் குடிநீர் ஏரி தூர்வாரி ஆழப்படுத்தி தடுப்புச் சுவர் அமைத்தல், ரூ.6.93 லட்சத்தில் தெற்கு மாதவி பரண் ஏரியை தூர்வாரி, ஆழப்படுத்தி படித்துறை அமைத்தல், ரூ.9.65 லட்சத்தில் சிறுகன்பூர் மாரியம்மன் கோயில் தெற்கு தெருவில் சிமெண்ட் சாலை அமைத்தல், ரூ.9.10 லட்சத்தில் சிறுகன்பூர் ஊராட்சியில் சாவடி அருகில் சிமெண்ட் களம் ஆகிய பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது.
பணிகளை ஆலத்தூர் ஊராட்சி யூனியன் சேர்மனும், ஒன்றிய செயலாளருமான என்.கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். முன்னாள் ஆலத்தூர் முன்னாள் சேர்மன் முத்துக்கண்ணு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கொளக்காநத்தம் ஊராட்சி தலைவர் ராகவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்ரமணியன், கிளை செயலாளர் அழகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.