Perambalur: Inauguration of Shoe Factory at Erayur Sipcot Industrial Park Preparatory Work: A.RAJA MP Scrutiny!

பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள காலணி தொழிற்சாலையை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி மூலமாக திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை எறையூரில், நீலகிரி எம்.பி. ஆ.இராசா மற்றும் கலெக்டர் கற்பகம் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 28.11.2022ஆம் நாள் பெரம்பலூர் மாவட்டத்தில் எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவினை தொடங்கி வைத்து, கோத்தாரி பீனிக்ஸ் நிறுவனத்தின் காலணி தொழிற்சாலை தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், அடிக்கல் நாட்டப்பட்ட ஒரே ஆண்டில், அதேநாளில் காலணி தொழிற்சாலையினை தொடங்கி வைத்திடும் வகையில் 28.11.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் காலணி உற்பத்தி தொழிற்சாலையினை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, பெரம்பலூர் எம்.எல்.ஏ., ம.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இது தொடர்பாக நிகழ்ச்சி நடைபெறவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் நீலகிரி எம்.பி., ஆ.இராசா மற்றும் கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொழிற்சாலைக்குள் நடைபெற்றுவரும் சாலை அமைக்கும் பணிகளை துரிதமாக முடிக்குமாறும், நிகழ்ச்சி நடைபெறும் நாளில் வரும் மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்திடுமாறும், வாகனங்களை முறையாக நிறுத்துவதற்கு இடவசதி, காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை கலெக்டர் கற்பகம் வழங்கினார்.

தமிழ்நாடு வழிகாட்டு நிறுவன மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு மற்றும் சிப்காட் மேலாண் இயக்குநர் கி. செந்தில்ராஜ் உடனிருந்தனர். பெரம்பலூர் மாவட்டதிமுக செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன், மங்களமேடு காவல் துணை கண்காணிப்பாளர் சீராளன், மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகா, வட்டாட்சியர்கள் சரவணன் (பெரம்பலூர்), மாயகிருஷ்ணன்(வேப்பந்தட்டை) மற்றும் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!