பெரம்பலூர் புதிய வருமான வாp அலுவலக திறப்பு விழாவில் முதன்மை தலைமை ஆணையா;
பெரம்பலூர் : பெரம்பலூர் அரியலூர் மாவட்டத்திற்கான புதிய வருமான வரி அலுவலகம் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள தீனதயாளன் வணிக வளாகத்தில் முதல் தளத்தில் இன்று திறப்புவிழா நடந்தது.
விழாவிற்கு திருச்சிராப்பள்ளி வருமான வரி கிளை முதன்மை ஆணையர் எ.வஸந்தகுமார் அனைவரையும் வரவேற்றார் . தமிழ்நாடு வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் அஜித்குமார் ஸ்ரீவத்ஸவா அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது :
இந்த கிளையில் வார்டு 1,2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் வார்டு பெரம்பலூர் மாவட்டத்திற்கும் இரண்டாம் வார்டு அரியலூர் மாவட்டத்திற்கும் செயல்படும் எனவும் 10 லட்சம் வரை கம்பெனி அல்லாத வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் 15 லட்சம் வரையில் கம்பெனிக்கான வரி செலுத்துபவர்ளும் இந்த அலுவலகத்தின் வரம்புக்குள் வருவார்கள் எனவும்,
இதற்குமேல் வருமானம் உள்ளவர்கள் திருச்சி உதவி ஆணயைர் வருமானவரி அலுவலகத்தில் தாக்கல் செய்து பயன் பெறலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த பகுதியில் உள்ள வருமான வரி செலுத்துபவர்களுக்கு சிறந்த சேவையை வழங்குமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தி வருமான வரி தாக்கல் செய்வதிலும் வரி வசூலிப்பதிலும் மிகுந்த கவனத்துடனும் கண்டிப்புடனும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
விழாவில், தணிக்கையாளர்கள், பெரம்பலூர் நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பெரம்பலூர் புதிய வருமான வரி அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.