Perambalur is a camp of robbers, 7 pounds of talikodi was snatched from a woman this morning!

பெரம்பலூரில் நடந்து வரும் தொடர் கொள்ளையால் பெண்கள், வயதானர்கள் நடமாட அச்சமடைந்துள்ளனர்.

பெரம்பலூர் கல்யாண் நகரை சேர்ந்தவர் மூர்த்தி (70) இவரது மனைவி விஜயா (65). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இன்று காலை வீட்டின் அருகே உள்ள கார் ஷெட்டின் கதவை மூடிக் கொண்டிருந்த போது பின்னால் பைக்கில் வந்த கொள்ளையர்கள் விஜயா அணிந்திருந்த 10 பவுன் தங்கசங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது, கொள்ளையர்களின் கையில், 7 பவுன் தாலிக் கொடி சென்றுவிட்டது. 3 பவுன் தங்க செயின் மட்டும் விஜயா பிடித்துக் கொண்டதால், அது கொள்ளையில் இருந்து தப்பியது.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள காலை நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி பெண்களை அச்சத்தில் ஆழ்த்தியது. மேலும், பெரும் பரபரப்பையும் உண்டாக்கியது.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், டி.எஸ்.பி பழனிசாமி தலைமையில் சம்பவ இடத்திற்கு, இன்ஸ்பெக்டர் சக்திவேல், எஸ்.எஸ்.ஐ சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும், நேற்று வீடு புகுந்து, திருடிய சம்பவத்தில் 2 பேர் கிடைத்தனர், 3 பேர் தப்பித்தனர். நேற்று முன்தினம் காய்கறி வாங்கி வந்த மூதாட்டியிடம் 11 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பினர். இது போன்ற தொடர் திருட்டுகள் நடந்த வண்ணம் உள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்த கொலை, கொள்ளைகள் இன்னும் அடையாளம் காணப் படாத நிலையில் வெளிமாவட்ட திருடர்கள் அதிகளவில் பெரம்பலூர் முகாமிட்டுள்ளனரா என்ற சந்தேகம் பொது மக்களுக்கு எழுந்துள்ளது.

மேலும்,, பெரம்பலூர் காவல் நிலைத்திற்கு அளவிற்கு அதிகமான பணிப்பளுவும், போதுமான காவலர்களும், காவல் அதிகாரிகளும் இல்லாததும் ஒரு காரணம் என்பதால், அரசு உடனடியாக பெரம்பலூர் காவல் நிலையத்தை பிரிப்பதோடு, கூடுதல் காவலர்களை பணி நியமனம் செய்து சட்டம் ஒழுங்கையும், பொதுமக்களுக்கு திருடர்களிடம் நிம்மதியை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு அதிகாரிகள் எடுத்துரைத்து உடனடி தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

விளம்பரம்: https://dsmatrimony.net/

 

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!