பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் இரூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை கிளை நிலையத்தினை கதர் மற்றும் கிராம தொழில்வாரியத் துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி இன்று திறந்து வைத்தார். பின்னர், அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இரூரில் திறக்ப்பட்டுள்ள இந்த கால்நடை கிளை நிலையத்தால் இரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2,500க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படும். இதனால் கால்நடை வைத்துள்ளவர்கள் சிகிச்சசைக்கா வெகுதூரம் செல்ல வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன், அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமசந்திரன், பால் கூட்டுறவு சங்க இயக்குநரும், ஒன்றிய செயலாளருமான என்.கே.கர்ணன், கால்நடைப் பராமரிப்புத்துறை மருத்துவர்கள் பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிகள் என பலர் கலந்துகொண்டனர்.